News October 18, 2024
சென்னை காவலர் கீழே விழுந்து உயிரிழப்பு

சென்னையில் 11 வது மாடியில் இருந்து கீழே விழுந்து காவலர் பலியாகியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ஆர் ஆர் போலீஸ் ஸ்டேடியம் குடியிருப்பில் எலக்ட்ரிஷன் ஒர்க் செய்து கொண்டிருந்த போது 11ஆவது அடுக்குமாடி குடியிருப்பு மேலிருந்து தவறுதலாக கீழே இருந்த கார் மீது காவலர் செல்வகுமார் விழுந்து சம்பவ இடத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 9, 2025
சென்னையில் சிலை அமைப்பை ஒழுங்குபடுத்த திட்டம்

சென்னை, சாலைகள், நடைபாதைகள் மறையும் வகையில் சிலைகள் அமைக்கப்படுவது தொடர்பாக வரும் புகார்களின் பின்னணியில், சென்னை நகரில் பொதுஇடங்களில் சிலை அமைப்பை ஒழுங்குபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 2019ல் வருவாய் துறை வெளியிட்ட வழிகாட்டிகளை பின்பற்றி புதிய விதிமுறைகள் வரவிருக்கின்றன. அதிகாரிகள் இது தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.*சென்னை சாலைகளில் சிலை நிறுவப்பட்டுள்ளது பற்றி உங்கள் கருத்து?
News July 9, 2025
சென்னையில் உள்ளூரிலேயே அரசு வேலை அறிவிப்பு

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இதில், சென்னையில் மட்டும் 20 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு (044-25268323)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க. <<17001779>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். *அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்