News December 24, 2025

சென்னை: கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்

image

பாடியநல்லுாரைச் சேர்ந்தவர் லூர்து சார்லஸ் (29). திருமணமாகாத இவருக்கு பேஸ்புக் மூலம் கவுசல்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கவுசல்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, 2குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், லூர்து சார்லசுடன், வாடகை வீட்டில் வசித்து வந்த அவர் டிச.17ம் தேதி கணவருடன் சென்று விட்டதால், லூர்து சார்லஸ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அம்பத்துார் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 25, 2025

சென்னை: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்

image

சென்னை மந்தைவெளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே மரத்தில் அடையாளம் தெரியாத 30 வயது வாலிபர் தூக்கில் பிணமாக தொங்குவதாக அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று அங்கு சென்ற போலீசார் மரத்தில் சடலமாக தொங்கியவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

image

7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரனுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக்குக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டது. பொருளாதாரம், புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயாவுக்கு பதவி வழங்ப்பட்டது.

News December 25, 2025

சென்னை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ!

image

சென்னை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!