News March 29, 2026
சென்னை களத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

திரு.வி.க.நகர் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திமுக வேட்பாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் களத்தில் உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் EX மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியான இவர், கடந்த ஆண்டில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 11, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹200 சரிவு!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹1,000 அதிகரித்த நிலையில், இன்று ₹200 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் 22 கேரட் தங்கம் கிராம் ₹14,100-க்கும், சவரன் ₹1,12,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹265-க்கும், பார் வெள்ளி கிலோ ₹2,65,000-க்கும் விற்பனையாகிறது.
News April 11, 2026
ராஜ்மோகன், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு

எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன், செய்தி தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு உள்ளிட்ட மூன்று பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சூளை அங்காளம்மன் கோயில் செயல் அலுவலர் கங்காதேவி கொடுத்த புகாரின்பேரில், சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News April 11, 2026
கிட்னி திருட்டை நிரூபித்தால் ₹1 கோடி பரிசு

திமுக MLA கதிரவன் ஹாஸ்பிடலில் கிட்னி திருடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், மண்ணச்சநல்லூரில் மீண்டும் போட்டியிடும் கதிரவன் இதை மறுத்துள்ளார். தனது ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சைகள் அரசு அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது எனக் கூறிய அவர், கிட்னி திருட்டு குற்றச்சாட்டை நிரூபித்தால், ஒரு கோடி பரிசு அளிப்பதாகவும், அரசியலை விட்டு விலக தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.


