News September 29, 2025
சென்னை: கரண்ட் பில் அதிகமா வருதா?

சென்னை மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News December 11, 2025
சென்னை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News December 11, 2025
சென்னை: திரைப்பட பாணியில் பிரபல ரவுடி கைது!

சென்னை சூளைமேட்டில் 2024ல் நடந்த வழிப்பறி வழக்கில் ரவுடி பினுவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த தேடப்பட்டு வந்த குற்றவாளி பினு, சூளைமேட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த 75 பேரை சுற்றி வளைத்து பினுவை, போலீசார் நேற்று (டிச.10) கைது செய்தனர்.
News December 11, 2025
சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.


