News September 27, 2025
சென்னை: கம்யூ., மாநிலசெயலாளர் GH-ல் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாள்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
சென்னை: மனவேதனையில் கல்லூரி மாணவன் தற்கொலை!

வேளச்சேரி அம்பிகா தெருவை சேர்ந்தவர் முகேஷ் (19) தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் அம்மா துபாயில் வேலை செய்வதால், பாட்டி வீட்டில் தங்கி படித்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளனர். அந்த பெண் இவரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த முகேஷ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
சென்னை: கோயிலுக்கு சென்றவர் பலி!

சென்னை, M.G.R.நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (27) கார் மெக்கானிக்காக உள்ளார். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று இவரது தோழியுடன் கோயிலுக்கு மதுரவாயல் சர்வீஸ் சாலை வழியாக சென்ற போது, எதிரே வந்த மற்றொரு டூவீலரின் மீது மோதி, விபத்துக்குள்ளானது. இதில் விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழியும், எதிர்த் திசையில் வந்த இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

சென்னை அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது மதிவாணன் (29) அங்கிருந்த 7 வயது சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மதிவாணனை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.


