News October 23, 2025

சென்னை: கடற்கரையில் பரவும் வெண் நுரைகள்!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கூவம் ஆற்றில் தேங்கிக் கிடந்த ரசாயன கழிவுகளும், ஆகாய தாமரையும் அடித்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலந்து வருகின்றன. இதனால் மலைபோல் வெண் நுரைகள் உருவாகி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை கடற்கரையோரம் படர்ந்துள்ளது.

Similar News

News October 23, 2025

’நாங்கள் மழைக்கு தயார்!’ – மேயர் பிரியா

image

சென்னையில் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, ’அதிக மழைக்கு தயாராக இருக்கிறோம். இராயபுரம் மண்டலத்தில் 9 மீட்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 5 சுரங்க பாதைகள் சீரமைக்கப்பட்டு, மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1.50 லட்சம் பேருக்கு காலை உணவும், 2.30 லட்சம் பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

News October 23, 2025

தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு!

image

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News October 23, 2025

பருவமழை தொடர்பாக துணை முதல்வர் ஆய்வுக் கூட்டம்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.23) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பருவமழை தொடர்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளின் அடிப்படையில் நடந்துள்ள பணிகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

error: Content is protected !!