News July 9, 2025
சென்னை உயர் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி மீது காட்டம்

சென்னை உயர் நீதிமன்றம், ராயபுரம் மண்டல அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் குறித்து நடவடிக்கை எடுக்காத சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஐஏஎஸ் அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என்று தன்னை நினைத்துக் கொள்கிறாரா?” எனக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளது.
Similar News
News August 25, 2025
சென்னை: What’s App இருக்கா! உஷார்

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் சுரேஷ்குமார். இவருக்கு What’s App-ல் மெசேஜ் ஒன்று வந்தது. அது பைல் வடிவில் இருந்ததால், அதை அவர் கிளிக் செய்தார். இதனையடுத்து அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1.20 லட்சம் எடுக்கப்பட்டதாக SMS வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து யுபிஐ பயனர்களை குறிவைத்து பணமோசடி நடந்து வருவதால் கவனமாக இருக்க சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (SHARE)
News August 25, 2025
சென்னையில் 41,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் செயலிழப்பு

சென்னை மாநகராட்சி ஆய்வில் 41,000க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் (மண்டலம் 1–5) 10,937, மத்திய பிராந்தியத்தில் (6–10) 19,816, தெற்கு பிராந்தியத்தில் (11–15) 9,935 விளக்குகள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக கிண்டி, கோட்டூர்புரம், எக்காட்டுத்தாங்கல், மவுண்ட் ரோடு, பாரதிநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
News August 24, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.