News March 1, 2026
சென்னை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 1, 2026
சென்னையில் விளம்பர பலகை

சென்னையில் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், உரிமத்துக்கான விண்ணப்பம் அளிக்கவும், ஏற்கெனவே அமைத்த விளம்பரங்களுக்கு உரிமம் பெற விதிமீறல்களைச் சரிப்படுத்தவும் வரும் மார்ச் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
News March 1, 2026
சென்னையில் ஹேட்ரிக் சாதனை!

2011-ல் இத்தொகுதி உருவாக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி, இன்றுவரை இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோட்டையாகவே இருந்து வருகிறது. 2011, 2016, 2021 என 3 முறையும் மு.க. ஸ்டாலின் இங்கேயே போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த 2021 தேர்தலில் ஸ்டாலின் சுமார் 60.86% வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரை விட 70,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு 2.12 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
News March 1, 2026
சென்னை: மனைவியை பிளேடால் கிழித்த கணவன்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரம்யா (25). இவரது கணவர் தினேஷ். கடந்த ஜனவரி மாதம் சதாம் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் புழல் சிறையில் தினேஷ் அடைக்கப்பட்டார். ரம்யா தனது கணவரை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தார். நேற்று காலை சிறையில் இருந்து வந்த அவர், திடீரென பிளேடால் சரமாரியாக ரம்யா கிழித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை நேற்று மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


