News January 29, 2026

சென்னை: இளம்பெண் பரிதாப பலி!

image

வியாசர்பாடியைச் சேர்ந்த அனுஸ்ரீ (20), படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திராவில் தனது தாத்தா இறந்த சோகத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு தந்தையிடம் போனில் பேசிவிட்டு, தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கேளம்பாக்கம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 31, 2026

சென்னையில் கரண்ட் கட்? Whatsappல் தீர்வு!

image

சென்னை மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 31, 2026

ஆம்ஸ்ட்ராங் பிறந்த நாள் போலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

image

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாளையொட்டி இன்று பெரம்பூர் வேணுகோபால் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொலையாளிகளில் முக்கிய நபரான பொன்னை பாலு, அவரது தாயாரின் மரணத்தையொட்டி இடைக்கால ஜாமீனில், புழல் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News January 31, 2026

சென்னை நந்தனம் கல்லூரிக்கு புதிய RULES!

image

சென்னை நந்தனம் அரசு கல்லூரி கேண்டீனில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கேண்டீன் ஊழியர் பாக்யராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 3 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், மாலை 6 மணிக்கு மேல் கல்லூரி வளாகத்திற்குள் யாரும் இருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!