News March 1, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச். 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
சென்னையில் ‘சைலண்ட்’ ஆக வேலை செய்யும் சீமான்

நாம் தமிழர் கட்சி இந்த முறை சென்னையில் உள்ள மீனவப் பகுதிகள் மற்றும் குடிசை மாற்று வாரியப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. “கடலோரத் தொகுதி”களில் தங்கள் வாக்குகளை அதிகரிக்க அவர்கள் எடுத்து வரும் மௌனப் புரட்சி, பெரிய கட்சிகளுக்குச் சவாலாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சீமானின் இந்த முயற்சி கைகொடுக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News March 2, 2026
சென்னை: தண்ணீரில் தலையை முக்கி கொலை!

கொளத்தூரை சேர்ந்த பிரதீப்(35)- லியா(28) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி நடத்தையில் கொண்ட சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் லியா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது 2 மகள்களுடன் மாமல்லபுரம் சென்ற பிரதீப் விடுதியில் 2 மகள்களை தண்ணீரில் தலையை முக்கி கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிகிச்சையில் இருந்து குணமானதால் அவர் கைது செய்யப்பட்டார்.
News March 2, 2026
சென்னையில் கொடூரத்தின் உச்சம்

அயனாவரத்தைச் சேர்ந்த 7வயது சிறுமி கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது விஜய்(35) என்பவர் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை தன் வீட்டிற்குள் அடைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளார். சிறுமி அலறலை கேட்டு வந்த அவரது தாய், மகளை மீட்டு, சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அயனாவரம் மகளிர் போலீசார் விசாரித்து, விஜயை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


