News April 19, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (18.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
Similar News
News July 5, 2025
அயப்பாக்கம் துாய்மை பணியாளர் நேர்மைக்கு தங்க மோதிரம் பரிசு

அயப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றும் ஜெயமணி, துாய்மை பணி மேற்கொண்டார். கடந்த 27ம் தேதி நடந்த திருமணத்திற்கு வந்திருந்த மாடம்பாக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் – மீனாட்சி தம்பதி, தவறவிட்டது தெரிந்தது. 25 லட்சம் மதிப்பிலான நகைகள் அடங்கிய பை, நேற்று தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயமணியின் நேர்மையை பாராட்டி, தம்பதி அவருக்கு அரை சவரன் மோதிரத்தை பரிசளித்தனர்.
News July 5, 2025
சென்னையில் இன்று கரண்ட் கட்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை போரூர், குன்றத்தூர் பிரதான சாலை, கே.கே. நகர், பெரம்பூர், பல்லாவரம், திருநீர்மலை, துரைபாக்கம், திருமுடிவாக்கம், கோயம்பேடு, சென்னையையடுத்த தாம்பரம், செம்பரம்பாக்கம், பகுதிகளில் கரண்ட் கட் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்கு தகுந்தார் போல் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
News July 4, 2025
சென்னையில் 300 மாமன்ற கவுன்சிலர்கள் தேர்வு

பெருநகர சென்னை மாநகராட்சிபகுதியில் தற்போதுள்ள 200 வார்டுகளைவிட 2026 ஆம் ஆண்டு இறுதியில் 300 மாமன்ற கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக ரிப்பன் பில்டிங் மாளிகையில் ரூபாய் 62.50 கோடி மதிப்பில் புதிய மாமன்ற அலுவலகம் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.