News May 17, 2024
சென்னை: இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!

சென்னை, பட்டாபிராம் துணைமின் நிலையத்தில் இன்று(மே 17) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பட்டாபிராம், தண்டுரை, ஐயப்பன் நகர், சேக்காடு, கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, தென்றல் நகர், முல்லை நகர், வெங்கடாபுரம், அண்ணா நகர், சி.டி.எச்.ரோடு, சார்லஸ் நகர், டிரைவர்ஸ் காலனி, காமராஜபுரம், சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Similar News
News October 21, 2025
சென்னையில் இன்று மூடல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், 4 இறைச்சி கூடங்களும், மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு இன்று (செப்-21) அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல ஜெயின் கோவில்களில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைட்சி கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
News October 20, 2025
சென்னை: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று (20.10.25) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
News October 20, 2025
பட்டாசு கழிவை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது: மாநகராட்சி

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேர கட்டுப்பாடு உள்ளது. பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல், தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.