News October 3, 2025
சென்னை: இனி What’s App-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை What’s Appலயே பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)
Similar News
News October 3, 2025
சென்னை: வங்கி வேலை… ரூ.1 லட்சம் வரை சம்பளம்

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,820 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேர்வு மையம் ஆகும். விண்ணப்பிக்க இங்கு <
News October 3, 2025
BREAKING: சென்னையில் பெண்ணை கடித்து குதறிய நாய்

சென்னை, அபிராமபுரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை குமார் என்பவரின் வளர்ப்பு நாய் கடித்தது. நாய் கடித்ததில் வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளி உஷா(45) என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தொடர்ந்து நாய்கடி சம்பவம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
News October 3, 2025
சென்னை முதலிடம்! எதில் தெரியுமா?

சென்னை ரயில் கோட்டம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 30-ம் தேதி சிறப்பு டிக்கெட் சோதனையின் போது உரிய டிக்கெட் இன்றி பயணித்த 3,254 பேரிடம், ரூ.18.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், டிக்கெட் இன்றி பயணித்த ஒரு லட்சத்து 21,189 பேரிடம் இருந்து ரூ.6.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிக அபராத தொகையை வசூலித்து சென்னை முதலிடம் பிடித்ததாக தெரிவித்துள்ளனர்.