News February 7, 2026
சென்னை: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 11, 2026
சென்னை: கேக்கில் விஷம் கலந்து குடும்பத்திற்கே தந்த கொடூரம்

சென்னை பெரம்பூரை சேர்ந்த சகாயம் செபஸ்டின் என்பவது மனைவி பியூலா புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து மனைவி, மகன், மகளுக்கு கொடுத்து தானும் உண்டுள்ளார். இதனால் சகாயம் செபஸ்டின், அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மனைவி, மகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.
News February 11, 2026
சென்னையில் போலி மருத்துவர்கள்- உஷார்!

சென்னை அண்ணா நகர் முடி மாற்று சிகிச்சை மையத்தில் பணியாற்றிய 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உரிய கல்வித் தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், வேலூரை சேர்ந்த ஜாஃபர் சாதிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News February 11, 2026
சென்னை: விபத்தில் காதலன் பலி; தூக்கில் தொங்கிய காதலி!

சென்னை அயனாவரம் சோலையம்மன் தெருவைச் சேர்ந்த சுப்பு சவு மியா(20). இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது சுப்பு சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார்(22) என்ற வாலிபரை காதலித்து வந்ததாகவும் அவர் ரயில் விபத்தில் உயிரிழந்ததால் துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.


