News September 19, 2025
சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சென்னை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 19, 2025
சென்னை: மழையை எதிர்கொள்ள தயார்- கே.என்.நேரு

மயிலாப்பூரில் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பல இடங்களில் திட்டமிட்டபடி மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தண்ணீர் தேங்கும் இடங்களில் வேறொரு திட்டம் மூலம் மழை நீர் வடிக்கால்வாய் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் முடிவடையும் என கூறினார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
சென்னை: பருவமழைக்கு முன்பே நிரம்பும் ஏரிகள்…!

சென்னை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, புழல் ஏரி நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இது, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது, புழல் ஏரியில், 2.99 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.
News September 19, 2025
ALERT: சென்னையில் இன்று மழை வெளுக்கும்

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையா இருங்க.