News October 26, 2025
சென்னை: இனி அலைச்சல் வேண்டாம் ஒரு மெசேஜ் போதும்!

சென்னை மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 8, 2026
சென்னையில் குடிநீர் வராது!

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரத்தில் உள்ள குடிநீர் பகிர்மான நிலையத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை (பிப்.09) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணி நேரம் திருவெற்றியூர் குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் மாதவரம் குடிநீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
News February 8, 2026
சென்னை மெட்ரோவில் வேலை- APPLY HERE!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (CMRL) உள்ள பல்வேறு நிலை மேனேஜர் பதவிக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தலைமை ஜென்ரல் மேனேஜர், இணை ஜென்ரல்பதவிகளில் 19 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ₹2,70,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு இப்பணியிடங்களுக்கு <
News February 8, 2026
சென்னை: ஜூஸில் கிடந்த பூரான்!

காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (27). இவர் ராமாபுரத்தில் உள்ள டீக்கடையில் தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்து குதித்துள்ளார். அந்த ஜூஸில், உயிருடன் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்காரர் உரிய பதில் அளிக்காததால், அவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


