News March 18, 2024
சென்னை: இனி அந்த பக்கம் போகாதீங்க..!

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் பேருந்து நிலையம் மற்றும் அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த திட்டம் ரூ.823 கோடியில் மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Similar News
News September 25, 2025
தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்து

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
News September 25, 2025
சென்னை வந்தார் தெலுங்கானா முதல்வர்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்தார். சென்னை வந்த ரேவந்த் ரெட்டியை விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News September 25, 2025
தேனாம்பேட்டையில் மாணவர்கள் மோதல்: 8 மீது வழக்கு

தேனாம்பேட்டை டிஎம்எஸ் பகுதியில் 2 கல்லூரி மாணவர்களும் மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் காயப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் ராயப்பேட்டை GH-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் 8 நபர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.