News October 14, 2025

சென்னை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா?

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அனைத்து இணைப்போக்குவரத்து அதிகாரிகளுக்கும் போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளின் வரி, ஆவணங்கள் சரிபார்க்கப்படும். கூடுதல் கட்டண புகார்களுக்கு 1800 425 5161, 97893-69634, 93613-41926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News October 14, 2025

சென்னையில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

சென்னை: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <>விண்ணப்பிக்க <<>>அக்-18 கடைசித் தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

அடையாற்றில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை

image

அடையாறு பெட்ரோல் பங்க் அருகே காரில் சென்ற பிரபல ரவுடி ‘A1’ கொட்டிவாக்கம் குணா, மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிமறித்த நபர்கள், காரை நிறுத்தி சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த அடையார் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

error: Content is protected !!