News January 26, 2026
சென்னை அருகே கோரவிபத்து; பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

கேரளாவில் இருந்து வந்த பேருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோயம்பேடுக்கு செல்ல வேண்டிய சுமார் 18 பயணிகளுடன் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வரும்போது திடீரென பஸ்சின் முன்புற வலது பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் 20 பேர் காயமடைந்தனர்.
Similar News
News January 29, 2026
சென்னை: காதல் கணவன் விபரீத முடிவு

பரங்கிமலையைச் சேர்ந்த கார்த்திக் (21), 6 மாதங்களுக்கு முன்பு பாக்யா என்பவரைக் காதலித்து மணந்தார். அடிக்கடி மதுபோதையில் கார்த்திக் வீட்டிற்கு வந்த போது ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால் மனமுடைந்த கார்த்திக், தனது சித்தியிடம் போனில் தற்கொலை பற்றி கூறிவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 29, 2026
மாதவரம் பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மாதவரம்: கணபதி சிவா நகர், சாஸ்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர், முனுசாமி நகர், ராகவேந்திரா நகர், குளபம்குளம், விஷ்ணு நகர், அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 29, 2026
சென்னை: இளம்பெண் பரிதாப பலி!

வியாசர்பாடியைச் சேர்ந்த அனுஸ்ரீ (20), படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திராவில் தனது தாத்தா இறந்த சோகத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு தந்தையிடம் போனில் பேசிவிட்டு, தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கேளம்பாக்கம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


