News October 28, 2025

சென்னை: அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு அறிவுரை

image

சென்னை: பருமழை காலங்களில் தொலைதூரப் பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்தோடு இயக்க வேண்டும் எனவும் தண்ணீர் குறைவாக இருப்பதாக கூறி பயணிகளே இயக்க சொன்னாலும், மாற்று வழிகளையே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், கடலோரச் சாலை பேருந்து ஓட்டுநர்கள் வானிலை அறிவுறுத்தல்களை முறையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 29, 2025

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆ.ராசா

image

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஆஸ்திரேலியா நாட்டின் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) அமைப்பின் சார்பில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டில் மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமை தலைப்பில் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து இன்று திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான முக.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News October 28, 2025

கபடி வீராங்கனை கார்த்திகாவை பாராட்டிய மேயர் பிரியா

image

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மகளிர் கபாடி போட்டியில் தங்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது. இதற்கு காரணமாக இருந்த இந்திய அணியின் துணை கேப்டனும், சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகாவை பாராட்டி, சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி மேயர் பிரியா பாராட்டினார்.

News October 28, 2025

சென்னையில் 4.66 லட்சம் பேருக்கு உணவு!

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அக். 22 முதல் இன்று (அக்.28) காலை வரை மொத்தம் 4,66,650 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைக்க 215 நிவாரண முகாம்களும், அவர்களுக்கு உணவு தயாரிக்க 111 சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

error: Content is protected !!