News May 14, 2024
சென்னை: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 33ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் சென்னை மாவட்டம் 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 81.02% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 64.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.05 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News November 21, 2025
சென்னை: பைக்கில் சென்றவர் மீது கொலைவெறி தாக்குதல்!

அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் மவுலி (23) கார் ஓட்டுநர். நேற்று காலை, பைக்கில் மந்தைவெளி ரயில் நிலையம் அருகே சென்றார்.3 பேர் அவரை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர். அபிராமபுரம் போலீசார், கார் ஓட்டுனர் மவுலியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 21, 2025
சென்னை: வீட்டின் அருகே குடியிருந்த காமுகன்

தேனாம்பேட்டை பகுதியில், வேலைக்கு சென்றிருந்த பெண்ணின் இரு மகள்கள் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத், வீட்டுக்குள் சென்று சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த அவர்கள் தாய், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.20) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


