News March 27, 2026

சென்னை அண்ணா பல்கலை., மீண்டும் பாலியல் புகார்!

image

சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். நான் உனக்கு தந்தை போல எனக்கூறி கடந்த 3 ஆண்டுகளாக நேரிலும், தொலைப்பேசியிலும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை போல நிறைய மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரப்பரப்பு புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டையே உலுக்கிய SIR விவகாரம் ஓயாத நிலையில், மீண்டும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2026

சென்னை: BOB வங்கியில் வேலை! APPLY

image

சென்னை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

இரவு மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிப்பு

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10, 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இரவு மின்சார ரயில்கள் ரத்து மேலும் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 12-ந் தேதி அதிகாலை மற்றும் இரவில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு கடற்கரை வரும் ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது.

News April 8, 2026

அறிவித்தார் சென்னை ஆட்சியர்!

image

சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. அதன்படி, வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக 21ம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23ம் தேதி வரை 3 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் என 4 நாட்கள் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

error: Content is protected !!