News August 9, 2025

சென்னையை அலறவிட்ட கொலை.. திடுக் திருப்பம்

image

சூளைமேட்டைச் சேர்ந்தர் முகில். இவர் நேற்று குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது அண்ணன் ராஜபிரபா, முகில் கழுத்தை அறுத்து கொலை செய்தார். ஆனால், முகிலை கொன்றது தாய் பிரமிளா என சரணடைந்த நிலையில், ராஜபிரபா அளித்த வாக்குமூலத்தில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் இருப்பதால் தாய் பழி ஏற்றியதாக கூறினார். பின் ராஜ பிரபாவை கைது செய்தனர்.

Similar News

News August 10, 2025

சென்னை: இரவு நேர ரோந்து போலீசார் பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆக.9) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 9, 2025

சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனை

image

சென்னை தி.நகர் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி உள்ள மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர்.

News August 9, 2025

சென்னையில் 15% சாலை விபத்துகள் குறைவு

image

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15 சதவீதம் ஆக தடுக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!