News April 22, 2025
சென்னையைச் சேர்ந்த சிறுமி பலி

ஆலந்தூரை சேர்ந்த கார்த்திக் (31), மனைவி சுவேதா, மகள் நிஜிதா (10), உறவினர்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24) உடன் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது, வாலாஜா டோல்கேட் அருகே வேன் மற்றும் லாரிக்கு இடையே ஆட்டோ நசுங்கியது. இதில், சிறுமி நிஜிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
Similar News
News April 22, 2025
ராயபுரத்தில் ரயில் தடம் புரண்டது

சென்னை ராயபுரம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலின் 3ஆவது பெட்டியின் சக்கரங்கள் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதையில் இருந்து இறங்கிய ரயில் பெட்டியை மீண்டும் ரயில் பாதையில் ஏற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

சென்னையில் திடிரென மின்தடை ஏற்படும்போது, மின்னகம் (9498794987) எண்ணுக்கு கால் செய்து புகார் தெரிவிக்கலாம். ஒருவேளை அங்கு லைன் கிடைக்கவில்லை என்றால், சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 94440 99255, மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 94458 50739, சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 94983 78194, சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56672 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளிக்கலாம்.
News April 22, 2025
புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில், நேற்று (ஏப்ரல் 21) 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 2 ஆண்கள் மற்றும் 1 பெண் என மூவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் நலமுடன் உள்ளதாகவும், பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்.