News January 13, 2026

சென்னையில் PM மோடி பங்கேற்கும் மாநாடு

image

ஜன.23-ல் தமிழகம் வரும் PM மோடி, மதுரையில் நடைபெறவுள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மோடி பங்கேற்கும் மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்ளை தேர்வு செய்து, ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை பாஜகவினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

Similar News

News February 4, 2026

லோக் சபாவில் கடும் அமளி.. அவை ஒத்திவைப்பு

image

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, 2-வது நாளாக லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நேற்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நேற்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து இன்றும் எதிர்க்கட்சி MP-க்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக் சபா 12 மணிவரை ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

News February 4, 2026

ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு ஏன் அச்சம்? CM

image

நாடாளுமன்றத்தில் <<19042390>>ராகுல் காந்தி<<>> கேட்கும் கேள்விகளை கண்டு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக MP-க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் லோக்சபாவில் 8 MP-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

சற்றுமுன்: தக்காளி விலை அதிரடியாக சரிந்தது

image

நான் இல்லாமல் சமையலா என்ற கேள்வியை தக்காளி எப்போதும் நம்மை பார்த்து கேட்கும். ஆனால், நீ இல்லாமலும் எங்களால் இருக்க முடியும் என அதன் விலை சமீபத்தில் நம்மை திகைக்க வைத்தது. 1 கிலோ தக்காளி ₹50 – ₹70 வரை சென்று அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், விளைச்சல் அதிகரித்துள்ளதால், தக்காளி 1 கிலோ ₹10-க்கு விற்பனையாகிறது. இதனால் சமையல் செய்யும் வீட்டுக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!