News March 21, 2024
சென்னையில் IT சோதனை

சென்னை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. நீலாங்கரையில் பாலா என்பவரது வீட்டிலும், கேஸினோ டிரைவ், ப்ளூ பீச் சாலை மற்றும் அண்ணா நகர் அலுவலகம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 22, 2025
திடீரென ஸ்தம்பித்த GST சாலை

சென்னை, பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் கல்லூரி பேருந்து மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.
News August 22, 2025
BREAKING: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னையில் இன்று (ஆக.22) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கு மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமான என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
News August 22, 2025
வந்தாரை வாழ வைக்கும் நம்ம சென்னை!

மதராஸ் பட்டணமாக 386 ஆண்டுகளுக்கு முன்பு 1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆக.22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அப்பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவதில் சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு. மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என ஒவ்வொரு பெயர்கள் மாறினாலும், இன்று வரை சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.