News September 24, 2025
சென்னையில் 900 கோடி வரி வசூல்

ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.900கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களின் வாயிலாக கடந்த 2024-2025-இல் ரூ.2,023 கோடி வசூலிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை அரையாண்டு வரிவசூல் நடைபெறுகிறது. வரும் செப்.30-க்குள் வரி செலுத்த கடைசி நாள்.
Similar News
News September 24, 2025
கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில், 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் அனிருத், நடன இயக்குநர் சாண்டி உட்பட 90 கலைஞர்கள் விருது பெறுகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் இந்த விருதுகளை வழங்கவுள்ளார்.
News September 24, 2025
வெளிப்படை தன்மை வேண்டும்-ஜெயக்குமார்

சென்னையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “1,200 பேரை வாக்காளர்களாக கொண்ட 1,372 வாக்குச்சாவடிகளை பிரித்துள்ளனர். குளறுபடி இல்லாமல் வாக்காளர் பட்டியலை தயாரித்து அதை வெளிப்படை தன்மையுடன் பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டும். இதை சரி செய்யவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம்” என கூறினார்.
News September 24, 2025
கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கம்

சென்னை- நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு, இன்று முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதனால், இருக்கைகளின் எண்ணிக்கை 1,128இல் இருந்து 1,440 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 8 பெட்டிகளுடன் தொடங்கிய இந்தச் சேவை, 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது பயணிகளின் வசதிக்காக 20 பெட்டிகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.