News May 7, 2024

சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்!

image

சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் 55 ஸ்பாக்களுக்கு இன்று(மே 7) போலீசார் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்ததாக ஸ்பாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்ற நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 28, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 28, 2025

தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கம்

image

தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06017) நாளை (டிசம்பர் 29 ) இரவு 9.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 30 இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06018) மறுநாள் காலை 9.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

News December 28, 2025

சென்னை: கடன் தொல்லையை நீக்கும் கங்காதீஸ்வரர்

image

சென்னை புரசைவாக்கத்தில் பிரசித்திபெற்ற கங்காதீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து வகை கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். *கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!