News April 16, 2024
சென்னையில் 48 லட்சம் வாக்காளர்கள்
வடசென்னை மக்களவை தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் திருவொற்றியூரில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 86 வாக்காளர்களுக்கு 311 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும், 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்களுக்கு 4 ஆயிரத்து 680 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்
சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் 23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் நாளை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 20, 2024
முன்பதிவு செய்து ரூ.10,000 பரிசு வென்ற பயணி
சென்னை அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாதாந்திர குலுக்கலில் தேர்வான பயணி சேதுராமன் என்பவருக்கு ரூ.10,000 பரிசுத்தொகையை நேற்று போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது. முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
News November 20, 2024
சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டை எடுத்துச் செல்லுங்கள். தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.