News October 11, 2025
சென்னையில் 3400 தெருக்களுக்கு புதிய பெயர்

சென்னையில் சாதி பெயர்களை நீக்க மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது சென்னையில் 3400 தெருக்களில் உள்ள சாதி பெயர்களை கொண்ட இடங்களை மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த தெருக்களின் சாதி பெயர்களை நீக்கி புதிய பெயர்கள் சூட்ட மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் அக்.19 ஆம் தேதிக்குள் கோரப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 11, 2025
சென்னை: உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை பல்கலையில், முனைவர் பட்ட மேலாய்வாளர் படிப்புகளான டி.எஸ்சி., டி.லிட் பட்டம், எல்.எல்.டி., மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள், https://www.unom.ac.in இணையதளத்தில் அக்.,15-க்குள் விண்ணப்பிக்கலாம் என பல்கலை கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 11, 2025
சென்னை: அலற வைக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்

தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அவ்வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை- கோவை- மதுரைக்கு வழக்கமாக ரூ.600-ரூ.900 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் வரும் 17, 18-ம் தேதிகளில் ரூ.2,000-ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News October 11, 2025
சென்னை: ஒரே நாளில் 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் கடந்த சில நாட்களாக உயர் நீதிமன்றம், விமானநிலையம், ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சித் தலைவர்கள் வீடு, திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று சத்திய மூர்த்தி பவன், பத்திரிகையாளர் மணி வீடு, ஐடி நிறுவனம் என 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.