News October 15, 2024
சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார்

கனமழை காரணமாக, சென்னையில் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 1,000 பேர் தங்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களில், தண்ணீர், பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளது. 20 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து இடையூறு இல்லை என துணை முதல் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயப்பட வேண்டாம்.
Similar News
News September 13, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: முதல்வர் ஆய்வு

தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள் குறித்தும், முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News September 13, 2025
சென்னை: மழைநீரை சேகரிக்க புதிய நுட்பம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 470 எண்ணிக்கையிலான இக்கோ பிளாக்(ECO BLOC) மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல், மழைநீர் நிலத்தடியில் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் வளம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 13, 2025
ஸ்டாலின் முகாம்களில் 7,23,482 மனுக்களுக்கு தீர்வு

இதுவரை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட 46 சேவைகளில் வரப்பெற்ற 14,54,517 மனுக்களில், 7,23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், தீர்வு செய்யப்பட்ட மனுக்களில், 5,97,534 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இது தீர்வுசெய்யப்பட்ட மனுக்களில் 83% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.