News September 17, 2024
சென்னையில் 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மீனம்பாக்கம் பகுதியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது குறிப்பிடத்தக்கது. ஒரு சில இடங்களில் இயல்பை விட 5 முதல் 7 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கும். மே மாதத்தில் வீசும் வெப்ப அலைக்கு நிகராக செப்டம்பர் மாதத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
Similar News
News September 15, 2025
சென்னையில் கூடுதலாக பருவ மழை; வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வழக்கத்தை விட கூடுதலாக பருவ மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 18% கூடுதலாகவும், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று வரை 3% குறைவாகவும் பெய்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
News September 15, 2025
சென்னை: டிகிரி போதும்! ரயில்வேயில் வேலை

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க இங்கு <
News September 15, 2025
பருவமழைக்கு தயாராகும் மாநகராட்சி

கனமழையை எதிர்கொள்ள, சென்னை மாநகராட்சி 7,000 குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது. இதில், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, உணவு விநியோகிப்பது போன்றவை கற்றுத் தரப்படும். அதேசமயம், தொங்கும் மின்கம்பிகள், முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.