News September 14, 2024
சென்னையில் 181 வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 181 ஆவது நாளாக இன்றும் (14/9/24) பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News February 27, 2026
சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.85,000 முதல் ரூ.1,45,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். மேலும் பதவிக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் வரும் மார்ச்.09க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறக்காம ஷேர் பண்ணுங்க
News February 27, 2026
சென்னை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

சென்னை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க
News February 27, 2026
திமுக-வில் இணைந்த ஒபிஎஸ்

சென்னையில் இன்று (பிப்-27) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார். அவருடன் ஆவரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவரது மகன் ops ரவீந்திரன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் திமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். சில தினங்களுக்கு முன்பே சட்டசபையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர் முதல்வரை புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.


