News October 6, 2025
சென்னையில் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு

சென்னையில் தி.நகர் பகுதியில் தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி பொருட்கள் வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அங்கு தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். தி.நகரில் மட்டும் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு போடப்படவுள்ளது.
Similar News
News October 5, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (05.10.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News October 5, 2025
சென்னை பெண்களே.. இலவச தையல் மிஷின் வேணுமா?

சென்னையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
News October 5, 2025
சென்னை: நடிகை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் புரளி என தகவல் வெளியாகியுள்ளது.