News December 4, 2025
சென்னையில் 12 மணி நேரத்தில் 39 இண்டிகோ விமானங்கள் ரத்து

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகளால் விமானங்கள் ரத்து என்பது தொடர்கதையாக மாறி வருகிறது. இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் சென்னையில் இருந்து புறப்படும் 19 விமானங்களும் வருகை விமானங்கள் 20ம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
Similar News
News December 6, 2025
சென்னை பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று செயல்படும் என சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். டிசம்பர் 2ம் தேதி மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச. 6ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் இன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 6, 2025
சென்னை: கல்லூரி மாணவி கடத்தல்.. போலீஸ் அதிரடி

சென்னை மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 50 வயது நபரின் 19 வயது மகளை, நேற்று கல்லூரி முடித்து வீடு திரும்பும் வழியில், காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் நொளம்பூர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. போலீசார் நவீன தொழில்நுட்பம் மூலம் காரை பின் தொடர்ந்து, திண்டிவனம் அருகே பெண்ணை பத்திரமாக மீட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட ஷியாம் சுந்தர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
News December 6, 2025
சென்னைக்கு மழை எச்சரிக்கை!

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை & புறநகர் பகுதியில் அடுத்த 48மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் ஒரு சிலப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.


