News September 11, 2025
சென்னையில் 12 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (11.09.2025) 12 இடங்களில் நடைபெற உள்ளது. திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 11, 2025
சென்னை: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

சென்னை, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 11, 2025
சென்னை: ரேஷன் அட்டையில் திருத்தமா?

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் வரும் 13-ம் தேதி சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கை, பெயர் நீக்கம், போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம் செய்து கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம். (SHARE பண்ணுங்க)
News September 11, 2025
சென்னையில் MTC சலுகை மாதாந்திர பாஸ் திட்டம் அறிவிப்பு

சென்னையில் குறைந்த செலவில் பயணிக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் மாதாந்திர சலுகை பாஸ் திட்டம் மூலம் ரூ.1000 பாஸ் மூலம் ஏ.சி. பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளிலும் வரம்பற்ற பயண வசதி வழங்கப்படுகிறது. ரூ.2000 பாஸ் மூலம் ஏ.சி. பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் வரம்பற்ற பயணம் மேற்கொள்ளலாம்.
மாதாந்திர பாஸ் வழங்கும் இடங்களை காண: https://mtcbus.tn.gov.in/Home/travelasyou/11 பார்க்கலாம்.