News October 23, 2024
சென்னையில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

டானா புயல் காரணமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதிகளில் நிலைய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று ‘டானா’ புயலாக உருவெடுக்க உள்ளது. அதன்பிறகு, தீவிர புயல் சின்னமாக மாறி, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் அக்.25ஆம் தேதி ஒடிசா பூரி – சாகர் தீவு இடையே கரையை கடக்கும்.
Similar News
News January 26, 2026
சென்னையில் மின் தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் நாளை (ஜன.27) மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 – பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். அடையாறு: கெனால் பங்க் சாலை, புற்றுநோய் மருத்துவமனை, காந்தி நகர், கெனால் குறுக்குத் தெரு, விவேக் ஷோரூம், கிரசண்ட் அவென்யூ, காமராஜ் கல்லூரி, பம்பிங் ஸ்டேஷன், மலர் மருத்துவமனை, மல்லிபூ நகர், கருணாநிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
News January 26, 2026
சென்னை: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சென்னை சுகாதார அதிகாரியிடம்044-24321566 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 26, 2026
சென்னை: மெட்ரோ ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று(ஜன. 26), ஞாயிறு அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயங்கும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் 12 வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியிலும், பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.


