News December 29, 2025
சென்னையில் ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 பெறலாம்!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு சென்னை மாவட்ட அதிகாரியை (044 – 25264568, 91500 56800) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 1, 2026
சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

வளசரவாக்கம், காமராஜ் அவென்யூ பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் மகன் வீரகுமார் (15) இவர் 8ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால், நண்பர் வீட்டுக்கு விளையாட சென்ற போது மாடி கைப்பிடி சுவர் அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல, டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 1, 2026
புத்தாண்டு- சென்னை கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வடபழனி கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.