News August 18, 2025
சென்னையில் விநாயகர் சிலைகளைக் கரைக்க 6 இடங்கள்

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைக்க சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், பல்கலை நகர், நீலாங்கரை, பாலவாக்கம் மற்றும் காசிமேடு ஆகிய இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை கரைக்க சென்னை மாநகராட்சி இந்த 6 இடங்களைத் தேர்வு செய்துள்ளது. மேலும், சிலைகளைக் கரைக்கும்போது, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
சென்னையில் இங்கு தண்ணீர் வராது! ALERT

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18-ம் தேதி 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18-ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19-ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)
News August 18, 2025
சென்னைக்கு மழை இருக்கு

வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்டிபடி சென்னைக்கு அடுத்த 2 நாள்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
12வது மாடியில் இருந்து மருத்துவர் குதித்து தற்கொலை

கோடம்பாக்கம் பகுதியில் மருத்துவர் ஜோதிஸ்வரி தனது தாயாருடன் வசித்து வந்தார். அண்மையில், ஜோதிஸ்வரியின் சகோதரி வீட்டிற்கு வந்தபோது, கணவருக்கு 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் விரக்தியில் இருந்து வந்த மருத்துவர் 12ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தலையில் பலத்த படுகாயம் அடைந்த ஜோதிஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.