News December 27, 2025
சென்னையில் வடகிழக்கு பருவமழை 9% குறைவு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை, இயல்பை விட 2% குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பாக 793.5 மி.மீட்டர் மழை பெய்யும் நிலையில் நேற்று வரை 724.8 மி.,மீ மழையே, அதாவது 9% குறைவாகப் பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 28, 2025
சென்னை: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

சென்னை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas<
News December 28, 2025
சென்னை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
சென்னை: பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை

துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் 57 வயது பெண், கடையின் ஷட்டரைத் தூக்க உதவிகேட்டபோது, கந்தன்சாவடியைச் சேர்ந்த சந்துரு (34) எனபவர் அவரை வலுக்கட்டாயமாக கடைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவைக் கைது செய்தனர்.


