News October 31, 2025

சென்னையில் வடகிழக்கு பருவமழை 29% கூடுதல்

image

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 36% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பாக 171.5 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 233.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னையில் வடகிழக்கு பருவமழை 29% கூடுதலாக பெய்துள்ளது, 354.7 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Similar News

News November 1, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் நேற்று (31.10.2025) இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News November 1, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News October 31, 2025

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

மோந்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த 28ம் தேதி பள்ளிகளுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை வந்ததை தொடர்ந்து விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!