News May 23, 2024
சென்னையில் ரேஷன் கார்டு மக்களுக்கு குட் நியூஸ்

சென்னை மற்றும் புறநகரில் ரேஷன் கடைகள், காலை 8.30-12.30 மணி வரையும், பிற்பகல் 3-7 மணி வரையும் செயல்படுகின்றன. இங்கு மற்ற மாவட்டங்களை விட பிற்பகல் நேரத்தில் கூடுதலாக 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில் சில ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, உணவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, ரேஷன் கடைகள் பிற்பகல் மூடும் நேரத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 23, 2025
சென்னை நாள் – புத்தக கண்காட்சி

சென்னை அசோக் நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று சென்னை நாள் புகைப்படக் கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரியும் எழுத்தாளர்கள், ஊழியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் சென்னை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
News August 22, 2025
விநாயகர் சதுர்த்தி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், ‘சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. சிலை பாதுகாப்புக்கு 24 மணி நேரம் காவல் வைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கு மேல் சிலை வைக்க கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது
News August 22, 2025
சென்னை: ITI, டிப்ளமோ போதும், சூப்பர் வேலை!

சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.