News January 30, 2026

சென்னையில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 30, 2026

சென்னை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 30, 2026

மகாத்மா காந்தியும் சென்னையும்!

image

மகாத்மா காந்தி 1896 முதல் 1946 ஆம் ஆண்டு வரை, 20 முறை சென்னைக்கு வருகை தந்துள்ளார். 1896 ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னை வந்த காந்தி, ஜார்ஜ் டவுனில் 14 நாட்கள் தங்கி, பல்வேறு அரசியல் கூட்டங்களை முன்னெடுத்தார். காந்தியின் நினைவாக சென்னையில் ‘உத்தமர் காந்தி சாலையும்’, கிண்டியில் ‘காந்தி மண்டபமும்’ அமைக்கப்பட்டுள்ளது. காந்தியின் நினைவு தினமான இன்று (ஜன.30) அவரை நினைவு கூர்வோம்.

News January 30, 2026

சென்னை: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!