News April 1, 2025

சென்னையில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல்

image

சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகம்.

Similar News

News October 20, 2025

வால்டாக்ஸ் ரோட்டில் திருட்டு; மூவர் கைது

image

சென்னை வால்டாக்ஸ் ரோடு உட்வார்பு பகுதியில் உள்ள பாலாஜி இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் மேற்கூரை உடைத்து பித்தளை பிளேட்டுகள் திருடப்பட்ட சம்பவத்தில், C-3 ஏழுகிணறு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து பாலாஜி (37), சுடலை மணி (49), பார்த்திபன் (29) ஆகிய மூவரை கைது செய்தனர். ரூ.1.95 மதிப்புள்ள பித்தளை பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. எதிரி பாலாஜி மீது ஏற்கனவே 12 குற்ற வழக்குகள் உள்ளன.

News October 20, 2025

சென்னை: இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (19.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

News October 19, 2025

சென்னை- பெங்களூர் விமானத்தில் கோளாறு

image

சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமான பொறியாளர்கள் இயந்திர கோளாறை சரி செய்த பிறகு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 109 பேர் உயிர் தப்பினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!