News December 23, 2025
சென்னையில் ரூ.1 லட்சத்திற்கு CONDOM.. இப்படி ஒரு சாதனையா?

2025ஆம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆன்லைன் ஷாப்பிங் மூலம், சென்னையைச் சேர்ந்த ஒருவர் 228 முறை ஆர்டர் செய்து ரூ.1,06,398-க்கு காண்டம் வாங்கியதாக ஸ்விக்கி தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு 127 ஆர்டருக்கும் ஒருதடவை ஆணுறை ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விக்கி கூறி உள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் ஆணுறை விற்பனை 24 சதவீதம் அதிகரித்து உள்ளதாம்.
Similar News
News December 25, 2025
சென்னை: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

சென்னை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
சென்னை மக்களே கேஸ் புக் பண்ண ஒரு Hi போதும்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
சென்னை: மரத்தில் தொங்கிய ஆண் சடலம்

சென்னை மந்தைவெளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே மரத்தில் அடையாளம் தெரியாத 30 வயது வாலிபர் தூக்கில் பிணமாக தொங்குவதாக அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று அங்கு சென்ற போலீசார் மரத்தில் சடலமாக தொங்கியவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


