News April 15, 2025

சென்னையில் மீன் பிடிக்க தடை

image

சென்னையில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஏப்.14 நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. விசைப் படகுகளுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டாா் பொருத்தப்பட்ட செயற்கை இழுவை படகுகள், நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. மேலும், மீனவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.8,000 வழங்கப்படுகிறது.

Similar News

News January 9, 2026

BREAKING: சென்னையில் நாளை விடுமுறையா?

image

சென்னையில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை (ஜன.10) வழக்கம்போல் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பாட வேலையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 9, 2026

சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 09.01.26 முதல் 14.01.26 வரை மொத்தம் 22,792 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி இயங்கும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜன.09ம் தேதி 3,142, ஜன.10ம் தேதி 3,122, 11ம் தேதி 2,347 பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் சுமார் 11.35 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

சென்னை பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

error: Content is protected !!