News December 20, 2025

சென்னையில் மிரட்டி மாமூல் வசூல்!

image

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39). இவர்கள் இருவரும் ரவுடி நாகேந்திரனின் அக்கா மகன்கள் ஆவர். பிரபல குற்றவாளிகளான இவர்கள் இருவரும், நாகேந்திரனின் பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 29, 2025

சென்னை: ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே CHECK!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 29, 2025

சென்னை: ஆவணப்பட தயாரிப்பாளர் காலமானார்

image

தமிழ்நாட்டை சேர்ந்த பழம்பெரும் ஆவணப்பட தயாரிப்பாளர் எஸ். கிருஷ்ணசாமி (88) சென்னையில் நேற்று (டிச.28) வயது மூப்பு காரணமாக காலமானார். சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து பல ஆவணப்படங்களை தயாரித்த இவர் ‘இண்டஸ் வேலி டூ இந்திரா காந்தி’ என்ற ஆவணப்படம் மூலம் பிரபலமானார். மேலும், இவரை கௌரவிக்கும் விதமாக 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கிருஷ்ணசாமி மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 29, 2025

புழல் சிறையில் இன்று வாகனங்கள் ஏலம்

image

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் அலுவலகத்தில் பயன்படுத்த இயலாமல் கண்டம் செய்யப்பட்ட பைக், கார் ஆகிய 2 வாகனங்கள் 29ம் தேதி இன்று காலை 10 மணியளவில் புழல் மத்திய தண்டனை சிறையில் பொது ஏலம் நடத்தப்பட்ட உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் ரூபாய் 500 செலுத்தி, பெயர்களை பதிவு செய்து கொள்ளவும். ஏலம் முடிந்தவுடன் எடுக்காதவர்களின் தொகை திருப்பி கொடுக்கப்படும்.

error: Content is protected !!