News December 20, 2025

சென்னையில் மிரட்டி மாமூல் வசூல்!

image

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39). இவர்கள் இருவரும் ரவுடி நாகேந்திரனின் அக்கா மகன்கள் ஆவர். பிரபல குற்றவாளிகளான இவர்கள் இருவரும், நாகேந்திரனின் பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 26, 2025

சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை

image

சென்னை புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலையின் நடுவே ‘கேக்’ வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல அவர்களுடன் கைக்குலுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. முக்கியமான சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

சென்னை: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

image

சென்னை மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க. புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க.SHARE பண்ணுங்க

News December 26, 2025

சென்னை: 15000 போலிசார் பாதுகாப்பு பணி!

image

இன்று (டிச-26) புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர் மெரினாவில் 1000 போலிசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

error: Content is protected !!