News November 3, 2025
சென்னையில் மின்நுகர்வோர் கூட்டம்

மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கே.கே.நகர் கோட்டங்களில் நாளை (நவ.04) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மையம், மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News November 3, 2025
சென்னை பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் – 044-23452726, எழும்பூர் – 044-28455168, கிண்டி – 044-24700011, புளியந்தோப்பு -044-23452523, தி,நகர் – 044 – 23452614. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
News November 3, 2025
இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னையில் இன்று நவம்பர் 3ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை சிறப்பு விநியோகம் நடைபெறும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. ஆலந்தூர், அண்ணா நகர், திரு வி.க. நகர், அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அம்பத்தூர், வளசரவாக்கம் கோடம்பாக்கம் ஆகிய 15 மண்டலங்களின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
சென்னை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <


