News August 16, 2025

சென்னையில் மின்தடை அறிவிப்பு

image

அம்பத்தூர், ஒரகடம், ரெட்ஹில்ஸ், புழல், பாடியநல்லூர், வண்டிமேடு, நாரவாரிக்குப்பம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், பெசன்ட் நகர், அடையாறு, காந்தி நகர், மணலி, 200 அடி சாலை, பர்மா நகர், VOC நகர், பொன்னேரி, MMDA, கூடுவாஞ்சேரி, ஜே.ஜே.நகர், எழில் நகர், ஈஞ்சம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 16) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 16, 2025

சென்னையின் முதல் ரயில்வே ஸ்டேஷன்

image

தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையம் நம்ம வடசென்னை ராயபுரத்தில் தான் அமைக்கப்பட்டது. 1856ம் ஆண்டு கட்டப்பட்ட ராயபுரம் ரயில்நிலையத்தில் இருந்து முதல் ரயில் வாலாஜா பேட்டை வரை இயக்கப்பட்டது. இன்றைய வளர்ச்சி அடைந்த சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல், எழும்பூர் உள்ள நிலையில், இந்தியாவின் பழமை வாய்ந்த ரயில் நிலையமாக ராயபுரம் உள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

களை கட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை

image

விநாயகர் சதுர்த்தி ஆக-27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் எழும்பூர், மயிலாப்பூர், கோயம்பேடு,தி.நகர், வேளச்சேரி, கொசப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், விதவிதமான விநாயகர் சிலைகள் பக்தர்கள் மனம் கவரும் வகையில், பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, சதுர்த்தி நாளுக்காக பூஜை செய்ய, பக்தர்கள் பலரும் வாங்கி செல்கின்றனர்.

News August 16, 2025

ஆளுநர் உடலுக்கு மரியாதை செலுத்திய சீமான்

image

உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த இல.கணேசன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தற்பொழுது சென்னை டி நகர் இல்லத்தில் வைத்துள்ள அவருடைய உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!